எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்!
அனுமன் பாடல் வழக்கில் மகா எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்தது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடப்போவதாக அறிவித்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி மராட்டிய எம்பியும், நடிகையுமான எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் 153 ஏ பிரிவின் கீழ் மும்பை காவல்துறை கைது செய்திருந்தது. அனுமன் பாடல்களை பாட போவதாக அறிவித்ததை தொடர்ந்து, எம்பி நவ்நீத் ராணா வீட்டின் முன்பு சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, இருவரையும் மும்பை காவல்துறை கைது செய்திருந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் மே 6 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்பின், ஜாமீன் கோரி வழக்கு தொடுத்திருந்த நிலையில், எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்எல்ஏ ரவி ராணா ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்து மேலும் இரண்டு நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என மும்பை நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அனுமன் பாடல் வழக்கில் வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிராவின் அமராவதி எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்எல்ஏ ரவி ராணா ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.