இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது – ஆசிரியர் கி.வீரமணி
இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்.
இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர் கே.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் பரிதவிக்கும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள இனவாத அரசால் ஏற்பட்ட இன அழிவை (Genocide) எல்லாம் மறந்து தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உதவிக்கரம் நீட்டும் நிலையில்கூட, இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம். (2/2)
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) May 3, 2022