#Breaking:சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு – வெளியான ‘திடுக்’ தகவல்!

கடந்த 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு,காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் என மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.இதில்,பால்துரை என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.மேலும்,இந்த தந்தை மகன் கொலை சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்சை தன்னை தவிர மீதி உள்ள எட்டு பேரான ஏ2 முதல் ஏ 9 வரை குற்றம் சட்டப்பட்டவர்களே அடித்துக் கொன்றனர் என்ற தகவலை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
மேலும்,ஏன் அவர்களை சாகும் வரை அடித்துக் கொன்றீர்கள் என்று கேட்டதற்கு, தன்னை மார்ச் 26 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சிறையில் கொலை செய்ய முயற்சித்ததாகவும்,இது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது என்றும்,இதனடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி மதுரை மத்திய சிறையில் உள்ள கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே,சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை,மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர் என உயர்நீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025