காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் நிலவரம்.!

Default Image

கடந்த மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.  படம் மிகவும் ஜாலியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

kaathu

 

விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரும் நடித்துள்ளனர். ரௌடி பிக்ச்சர்ஸ்  நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில். இந்த படம் வெளியான நாள் முதல் நேற்று வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இந்த படம் 34.2கோடி வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் 22.3கோடி வசூல் செய்துள்ளது. படத்திற்கு வரவேற்பு அருமையாக கிடைத்து வருவதால் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்