#Justnow:இன்று முதல் பள்ளி வகுப்புகள் நேரம் மாற்றம் – அரசு முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெப்பம் அதிகரித்துள்ளது.இதனால்,வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில்,மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கும் நேரத்தை மாற்ற ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி,ஒடிசா அரசின் பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,இன்று முதல் பள்ளிகளில் கற்பித்தல் நேரத்திற்கான புதிய நேரம் காலை 6 மணி முதல் 9 மணி வரை இருக்கும்.ஆனால்,ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.இவை மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும்”,என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக,மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஐந்து நாட்களுக்கு விடுமுறை வழங்கிய நிலையில்,தற்போது வகுப்புகள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
Odisha government revises school timings amid the ongoing spell of heatwave in the state
The new timing is from 6:00 am to 9:00 am and comes into effect from today
Visuals from Bhubaneswar pic.twitter.com/1wbAnsuIyb
— ANI (@ANI) May 2, 2022
அதைப்போல,அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பஞ்சாப் அரசு மாணவர்களுக்கான பள்ளி நேரத்தையும் திருத்தியுள்ளது. அதன்படி,பஞ்சாப்பில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்படும் எனவும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை தொடரும் என்றும் மே 14 முதல் ஜூன் 30 வரை பள்ளிகள் மூடப்படும்,ஆனால் ஆன்லைன் வகுப்புகள் மே 16 முதல் மே 31, 2022 வரை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ,மாநிலக் கல்வி அமைச்சரிடம் மே 2 (இன்று) முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குவதை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.