இப்படி மட்டும் காளான் 65 செய்து பாருங்கள்..! நான்கு நாளைக்கு இதன் சுவையை மறக்க மாட்டீங்க..!
காளான் 65 எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: காளான் – 300 கிராம், கடலை மாவு –1 டீஸ்பூன், மைதா மாவு – இரண்டு டீஸ்பூன், சோள மாவு – 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1/2 மூடி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முதலில் வாங்கி வைத்துள்ள காளான்களை நன்கு சுத்தமாக தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். இதன் மேல் உள்ள தோல்களை சிலர் உரித்து விடுவார்கள். அதுபோன்று நீங்கள் எடுப்பீர்கள் என்றால் எடுத்துவிட்டு நன்கு கழுவி வைத்து கொள்ளுங்கள். இதனை 2 அல்லது 3 துண்டுகளாக அதன் அளவை பொறுத்து நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொண்டு, தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.
இதில் நறுக்கி வைத்துள்ள காளான்களையும் சேர்த்து காளானின் எல்லா இடங்களிலும் படும்படி பிரட்டி எடுத்து கொண்டு அரை மணி நேரம் அதில் வைத்து ஊற வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு காளான்களை போட்டு நன்கு சிவந்த பிறகு எடுக்க வேண்டும். சூடான மொறுமொறுப்பான சுவையான காளான் 65 தயார். இதை சுவைத்த பிறகு நான்கு நாட்களுக்கு சுவை மறக்காது. அந்த அளவு அனைவரும் விருப்பமான சுவையில் இந்த காளான் 65 இருக்கும்.