இந்தி பேசாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் – உபி அமைச்சர் சஞ்சய் சர்ச்சை கருத்து!

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டு மக்கள் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,இந்தி மொழி விவாதத்திற்கு மத்தியில்,உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத்,இந்தியை விரும்பாதவர்கள் வெளிநாட்டினர் என்றும், இந்தி பேசாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு இடத்தில் குடியேற வேண்டும் என்றும் கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சஞ்சய் நிஷாத், “இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும்.நீங்கள் ஹிந்தியை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடையவர்.நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம்,ஆனால் இந்த நாடு ஒன்றுதான்,இந்தியா ‘இந்துஸ்தான்’ அதாவது இந்தி பேசுபவர்களுக்கான இடம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.எனவே,இந்துஸ்தான் இந்தி பேசாதவர்களுக்கு ஏற்ற இடமல்ல அவர்கள் இந்த நாட்டை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும்”,என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.