கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு 10 மடங்கு ஆபத்தானது..! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!
மூன்றாவது அலையின் போது கண்டறியப்பட்ட BA.2 ஐ விட BA.12 10 மடங்கு ஆபத்தானது என ஆய்வில் தகவல்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பீகாரின் மாநிலம், பாட்னாவில் ஓமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட, இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம், நாட்டில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது கண்டறியப்பட்ட BA.2 ஐ விட BA.12 10 மடங்கு ஆபத்தானது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் நம்ரதா குமாரி கூறுகையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, 13 மாதிரிகளை பரிசோதனை செய்தோம். அவற்றில் ஒன்று பி.ஏ. 12 வகையையும், மீதமுள்ள 12 மாதிரிகள் BA.2 வகையையும் சேர்ந்தது. BA.12 மாறுபாடு BA.2 ஐ விட 10 மடங்கு ஆபத்தானது. இருப்பினும், கவலைப்படத் தேவையில்லை. அதிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என கூறியுள்ளார்.