கொரோனா ஊரடங்கில் பாதுகாப்பற்ற உடலுறவால் 85,000 பேருக்கு HIV பாசிட்டிவ்..! முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா..?

இந்தியாவில் கடந்த 2 வருட ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 85 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக கடந்த இரண்டு வருடமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த நிலையில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 85 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற்றுள்ளார்.
அதன்படி 2020-21 ஆம் ஆண்டில் பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் காரணமாக இந்தியா முழுவதும் 85,268 பேருக்கு எச்ஐவி வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும், ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளது. 2019-20ல் 1.44 லட்சமாக இருந்த எச்.ஐ.வி பாதிப்பு, 2020-21 ஆம் ஆண்டில் 85 ஆயிரமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025