இலங்கை துப்பாக்கிசூடு – காவலர்களை கைது செய்ய உத்தரவு..!
இலங்கை துப்பாக்கிசூட்டிற்கு காரணமான காவலர்களை கைது செய்து ஆஜர்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டு அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலைக்க முயன்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கிசூட்டிற்கு காரணமான காவலர்களை கைது செய்து ஆஜர்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிரிழந்தவர், காயமடைந்தவர்கள் உடலில் ஏற்பட்ட காயங்கள் துப்பாக்கிசூட்டினால் ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.