மிருகங்களை வைத்து புதிய முயற்சியில் இயக்குனர் ராம்.!? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
இயக்குனர் ராம் அடுத்ததாக, நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் குரங்கு, முதலை, எலி என பல மிருகங்கள் நடித்துள்ளதாகவும், அதில் எலி மட்டும் படத்தின் கடைசி வரை நிவின் பாலி சூரியுடன் இருக்குமாம். இது ராமின் முதல் கமர்ஷியல் திரைப்படம் எனவும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதற்கு முன்பு ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், தரமணி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விலங்குகளை வைத்து புதிய படம் இயக்கும் முயற்சியை எடுத்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ளது. விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.