#BREAKING: மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றுமொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதன்படி, 24,805 டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16.67 கோடி கூடுதலாக செலவாகும் எனவும் குறிப்பிட்டார். இதுபோன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.