#BREAKING: 500 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் – அமைச்சர் அறிவிப்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்று அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை, தொழிலாளர் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், பேரவையில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், ரூ.97.55 கோடியில் 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன்பின் பேசிய அமைச்சர், திமுக ஆட்சியில் வேலை வாய்ப்பிற்கு பஞ்சமில்லை, எத்தனை இளைஞர்கள் படித்தாலும் அனைவருக்கும் முதலமைச்சர் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார். ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்றும் கூறினார்.