#BREAKING : காங்கிரசில் இணைய மறுத்ததற்கு இதுதான் காரணம்..! – பிரஷாந்த் கிஷோர் விளக்கம்

Default Image

காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்ததற்கு என்ன காரணம் என விளக்கம் கொடுத்த பிரஷாந்த் கிஷோர். 

தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, அவரது இல்லத்தில் கிட்டத்தட்ட 4 முறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகவும், 2024-ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட  நிலையில், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்குழு ஒன்றை, நேற்று உருவாக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  உத்தரவிட்டுருந்தார். இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக அவரை கட்சியில் கிற அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூர்வமாக சேர மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கனகிராஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், பிரசாந்த் கிஷோர் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் இணையாவிட்டாலும், அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரஷாந்த் கிஷோர் அவர்கள், கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும் காங்கிரஸ் விடுத்த அழைப்பை நான் ஏற்கவில்லை. காங்கிரசுக்கு என்னைவிட தலைமையே தேவை. காங்கிரஸ் கட்சிக்குள் அடிப்படை பிரச்சனைகளை சீர்திருத்தங்கள்  துணிச்சல் வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடியுள்ள அடிப்படை சிக்கல்களை தீர்க்க முன்வர வேண்டும் என்றும்  விளக்கமளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்