#JustNow: எலான் மஸ்க் வசமாகிறது ட்விட்டர் நிறுவனம்? – வெளியான தகவல்!

Default Image

எலான் மாஸ்க் வாங்க வந்த விலையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் அவருக்கு விற்கப்படும் என தகவல்.

பிரபல சமூகவலைத்தள ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வாங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக கூறப்பட்டது. இதன் மூலம் ட்விட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லருக்கு எழுதிய கடிதத்தில், ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்றும் இதுதான் தனது சிறந்த மற்றும் இறுதி சலுகை எனவும் தெரிவித்திருந்தார். ட்விட்டரை கையகப்படுத்தும் முயற்சி வெற்றியடைந்தால், ட்விட்டர் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது எனவும் இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டு அங்கேயே 3 மில்லியன் டாலர் சேமிக்க முடியும் என மஸ்க் தெரிவித்திருந்தது, ட்விட்டர் நிர்வாக உறுப்பினர்களை எரிச்சல் ஊட்டும் விதமாக அமைந்தது.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 3 லட்சத்து 30,000 கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முன்வந்திருக்கிறார். ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கக்கூடிய இயங்குநர்கள் குழுவில் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், எலான் மாஸ்க் வாங்க வந்த விலையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் அவருக்கு விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை ரூ.4,150 என்ற விலையில் விற்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ரூ.3.56 லட்சம் கோடியை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று நடைபெறும் ட்விட்டர் நிறுவன நிர்வாக குழு கூட்டத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ட்விட்டர் நிறுவனம் தன் வசமானதும் நிர்வாக குழு இயக்குநர்கள் அனைவரும் நீக்கப்படுவர் என்றும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்தாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரிடம் ட்விட்டர் நிறுவனம் விற்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்