புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி..!
டெல்லியில் இருந்து திரும்பிய ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து திரும்பிய ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜிப்மரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.