‘பள்ளிக்கு கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்’ – ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து வெடித்த புதிய சர்ச்சை..!
கர்நாடகாவின் கிளாரன்ஸ் தனியார் பள்ளியில், மாணவர்கள் பைபிள் கொண்டுவர பெற்றோரிடம் அனுமதி கடிதம் கேட்கப்பட்டது தற்போது புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தடைசெய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் கர்நாடகாவின் கிளாரன்ஸ் என்ற தனியார் பள்ளியில், மாணவர்கள் பைபிள் கொண்டுவர பெற்றோரிடம் அனுமதி கடிதம் கேட்கப்பட்டது தற்போது புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த பள்ளியில் பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்கள் பள்ளிக்கு பைபிள், வேதபாடல் புத்தகங்களை கொண்டு வருவது தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்பதை தெரிவிக்கும் படி கூறப்பட்டுள்ளது. காலையில் பள்ளி ஒன்று கூடுதல், பிரார்த்தனைகளுக்காகவும், மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் ஆன்மீக நலத்துக்காக பைபிளை வருவதற்கு சம்மதம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை அனைத்து 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளியின் இந்த செயலுக்கு, இந்து அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.