மீண்டும் இணைந்த அதே கூட்டணி.! பாலிவுட்டில் களமிறங்கும் சூர்யா.!

Default Image

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.

படத்தில், சூர்யாவுடன் அபர்ணா பால முரளி தாஸ், கருணாஸ், மோகன் பாபு என பல நடிகர்கள், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள், படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. ரசிகர்களுக்கு அளித்த ஒரே ஒரு ஏமாற்றம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பதே. ஓடிடியில் வெளியானாலும் அதில் சில சாதனைகளையும் படைத்தது.

இந்நிலையில், தமிழில் இந்த படத்தி வெற்றியை தொடர்ந்து ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. இந்த ஹிந்தி ரீ மேக்கையும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்குவார், அதில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பார் என்ற அறிவிப்பும் கடந்த ஆண்டே வெளியானது.

 அந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்-கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் சூர்யா தயாரிப்பதாகவும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப் பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தனது 2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பதன் மூலம் பாலிவுட் சினிமாவில் தயாரிப்பாளராக  களமிறங்குகிறார். இதனால் ரசிகர்கள் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், சூரரைப்போற்று திரைப்படம் ஏற்கனவே இந்தியில் டப் செய்யப்பட்டு உதான் எனும் பெயரில் கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி  தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்