#JustNow: விமானத்தில் புகைபிடித்த பயணி கைது!
குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்த தஞ்சை பயணியை காவல்துறை கைது செய்துள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணி சேவியர் என்பவர் புகை பிடித்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் புகை பிடித்தற்கு சக பயணிகள் கடும் ஆட்சபனை தெரிவித்துள்ளனர். சக பயணிகளின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் தஞ்சை பயணி புகை பிடித்துள்ளார். விமானம் சென்னையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் சேவியரை போலீசில் ஒப்படைத்தனர். இதன்பின் தஞ்சை பயணி சேவியரை கைது செய்து விமான நிலைய போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.