அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை – அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடிய அமரீந்தர் சிங்!

Default Image

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அம்ரீந்தார் சிங் ராஜா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் வாக்குறுதி குறித்து பேசியுள்ள ராஜா,  பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயிகள் தற்கொலைகளை நடக்காது என கடந்த வருடம் அக்டோபர் மாதம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை அரவிந்த் கெஜ்ரிவால் நினைவில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இருபத்தி நான்கு நாட்களில் மட்டும் 14 தற்கொலைகள் நடந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல்,  விவசாயிகளுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? ஏன் இதுபோன்ற பிரச்சினையில் அமைதியாக இருக்கிறீர்கள் எனவும் அவர் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு தங்கள் வாக்குறுதியை காப்பாற்றியதாகவும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கடன்களை தள்ளுபடி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்