#Breaking:பொது இடங்களில் இவை கட்டாயம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Default Image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம்  முதல்வர் ஸ்டாலின் தற்போது முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளதாவது:”தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.குறிப்பாக சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் உயர்ந்துள்ளது.ஒமைக்ரான் தொற்றின் புதிய வகையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.எனினும் உயிரிழப்புகள் உயரவில்லை என்பது ஆறுதல் அளித்துள்ளது.

கொரோனவை கட்டுப்படுத்த நம் வசம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி தான்.ஏனெனில்,தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.எனவே,இனி வரும் வாரங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை,பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும்,இடங்களிலும்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக,கொரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்