இனிமேல் இந்த விசா செல்லாது…! இந்தியா அதிரடி நடவடிக்கை…!
சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவிப்பு.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று தங்களது படிப்பை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏப்ரல் 20ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மட்டும் இந்தியாவிற்கு நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய குடியிருப்பு அனுமதி அட்டை, இந்தியா வழங்கிய விசா மற்றும் இ-விசா, வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டை, இந்திய வம்சாவளி அட்டை, தூதரக கடவுச்சீட்டு ஆகியவற்றை வைத்துள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில், கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்வதால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு இணக்கமான நிலைப்பாட்டினை எடுக்கும்படி இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குறித்து பேசிய பாக்சி, இந்த விவகாரத்தில் சீனா ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. சீனாவிற்கு வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து சீன தரப்பில் இதுவரை எந்த ஒரு திட்டவட்டமான பதிலும் அளிக்கவில்லை என தெளிவு படுத்துகிறேன் என்றும், மாணவர்களின் நலனுக்காக சீனா தரப்பை ஒரு இணக்கமான நிலைப்பாட்டை எடுக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.