30 நாட்கள் தூங்குபவர்களுக்கு ரூ.26,500 சன்மானம்! – மலேசிய ஆராய்ச்சியாளர்கள்!

Default Image

மலேசியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுக்காக 30 நாட்கள் தூங்குபவர்களுக்கு ரூ.26,500 சன்மானம் வழங்கப்படும் என தகவல்.

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அனுபவங்களில் ஒன்றாகும். ஏனெனில் நீங்கள் உங்களை எவ்வாறு புதுப்பித்து புத்துயிர் பெறுவதற்கு தூக்கம் மிக அவசியமாக இருக்கிறது. எனவே, நீங்கள் தூங்குவதை விரும்புபவராக இருந்தால், உங்களுக்காக ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மலாயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வைத் திட்டமிட்டனர். அதில் பங்கேற்பாளர்கள் தூங்க வேண்டும் என்பது தான் நிபந்தனை.

மலேசியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுக்காக 30 நாட்கள் தூங்குபவர்களுக்கு ரூ.26,500 சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் உடல் எடை கட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர்கள் ஒரு மாதம் தூங்கும் வீட்டில் தங்கி கண்காணிக்கப்படுவார்கள். பங்கேற்பாளர்கள் தூங்கும் நிலையின் எதாவது கண்டறியப்பட்டால், அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.

தன்னார்வலர்கள் தூங்கும் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டதும், தனிநபர்கள் தூங்கும் வீட்டில் தூங்குவதற்கு மட்டுமே செல்ல வேண்டும்.  பங்கேற்பாளர்கள் 30 இரவு தூக்கத்தை முடித்த பிறகு RM 1,500 பெறுவார்கள். இருப்பினும், இந்த சுவாரசியமான விளம்பரம் வைரலான பிறகு அதிகமான எதிர்வினை காரணமாக இப்பதிவு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டில், பிரான்சின் விண்வெளி மருத்துவம் மற்றும் உடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பங்கேற்பாளர்களை மூன்று மாதங்கள் படுக்கையில் தூங்குவதற்கு ஊக்குவித்தது, அவர்கள் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை ஆய்வு செய்தனர். 16,000 யூரோக்கள் (சுமார் ரூ.11.2 லட்சம்) சம்பளத்துடன் கொடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்