#BREAKING: சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு.. XE வகை – சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை ஐஐடியில் இதுவரை 55 பேருக்கு கொரோனா உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடியில் 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கின்றனர். கொரோனா கண்டறியப்பட்ட அனைவருக்கும் குறைவான அளவு பாதிப்பு தான். சிறிய அளவில் தொண்டை எரிச்சில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எந்தவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது 2 வாரங்களுக்கு பிறகே தெரியவரும். தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை. இப்போதுவரை தொற்று பாதிப்பு விகிதம் குறைவாகதான் உள்ளது. கொரோனா குறித்து மக்கள் பதற்றம் அடையும் சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்றும்  கொரோனா கட்டுக்குள் தான் உள்ளது எனவும் தெரிவித்தார். எனவே, சென்னை ஐஐடியில் ஏற்கனவே 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்