#Breaking:தமிழகத்தில் மின்வெட்டு – சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

Default Image

தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது.

ஈபிஎஸ் கேள்வி:

ஆனால்,இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு? கேள்வி எழுப்பினார்.

அமைச்சரின் பதில்:

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் இதனால்தான் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்ப்பட்டுள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.குறிப்பாக,அதிமுக ஆட்சியிலும் 68 முறை மின்வெட்டு இருந்ததாக செந்தில் பாலாஜி கூறினார்.

அதிமுக வெளிநடப்பு:

இந்நிலையில்,மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டப் பேரவையில் இருந்து அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் அவர்கள்:”தமிழகத்தில் தற்போது தொடர் மின்வெட்டு ஏற்பட்டு,மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை அரசின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்தோம்.

அரசின் தவறான முடிவு:அதிமுக

ஏனெனில்,தமிழக மின்சார வாரியம் மற்றும் தமிழக அரசு நிலக்கரியை சரியாக கொள்முதல் செய்யாததும்,தவறான முடிவுகளுமே காரணம்.இனி வரும் காலங்களில் கோடை வெயில் அதிகரிக்கும்,மின் தேவை அதிகரிக்கும்.எனவே,அதற்கு ஏற்றவாறு மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.அதற்கு தேவையான நிலக்கரியை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

ஆனால்,நிலக்கரி இல்லாத காரணத்தினால் அனல்மின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்ய முடியாமல் மின்வெட்டு ஏற்பட்டு,மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக,மின்வெட்டால் மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,இதனைக் கண்டித்து வெளிநடப்ப்பு செய்துள்ளோம்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்