செஸ் ஒலிம்பியாட் போட்டி – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு!

சென்னைக்கு அருகில் மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆக.10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில்,சென்னைக்கு அருகே 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பொதுத்துறை அமைச்சர்,விளையாட்டுத்துறை அமைச்சர்,சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மேலும்,நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025