#BREAKING: தமிழகத்தில் 8ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்! – அமைச்சர் அறிவிப்பு

Default Image

மே 8-ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது என அறிவிப்பு.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் வரும் 8ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். முதல் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுமார் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களை தனித்தனியே சந்தித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் மட்டும் அல்ல சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தொற்று எண்ணிக்கை 21 வரை குறைந்து தற்போது 39 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் வெளி மாநில தொழிலாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்