Drinks party : பள்ளி விடுதியில் மது விருந்து நடத்திய பத்தாம் வகுப்பு மாணவர்கள்..!
Telangana : தெலுங்கானா மாநிலத்திலுள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மே மாத விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டும் என விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர்.
அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் சொல்லி மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின் போது மாணவர்கள் அனைவரும் விடுதியில் வைத்து மது அருந்திக்கொண்டே சாப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படத்தையும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.