இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம் – பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலக்கரி சுரங்கம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள தகவலில், இந்த நிலக்கரி சுரங்கம் கடந்த இரண்டு மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இதன் அடியில் தற்பொழுது சட்டவிரோதமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிலக்கரி சுரங்கம் இன்று காலை எட்டரை மணியளவில் இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோர் அல்லது உயிரிழந்தோர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஆனால், இந்த நிலக்கரி சுரங்க விபத்தின் காரணமாக உள்ளே 10-க்கு மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இப்பகுதியில் இதே போன்று நிலக்கரி சுரங்க விபத்து ஒன்று ஏற்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025