#Breaking:கோடநாடு கொலை வழக்கு – சசிகலாவிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்!
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கோடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்பதன் அடிப்படையிலும்,பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் அவரிடம் நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத்,ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி மற்றும் பெண் போலீசார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில்,கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரரணை நீடித்து வருகிறது.
அதன்படி,100 க்கும் மேற்பட்ட கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,
- கோடநாடு பங்களாவுக்கு எப்போது நீங்கள் சென்றீர்கள்?,அங்கு எவ்வளவு பணம்,நகைகள் என்னென்ன ஆவணங்கள் இருந்தன?,
- கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன?
- கோடநாடு பங்களாவில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார் மூலம் வெளியாட்கள் பணியில் சேர்க்கப்பட்டார்கள்?
- கோடநாடு பங்களா கொள்ளை,கொலை சம்பவம் எப்போது யார் மூலம் உங்களுக்கு தெரிய வந்தது?
- இது தொடர்பாக யார் மீது உங்களுக்கு சந்தேகம் உள்ளது? ,
- சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ்,கோடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் 6 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
மேலும்,கோடநாடு எஸ்டேட்டில் காணமல் போன நிலப்பத்திரங்கள் சென்னையில் ஒரு ஹோட்டலில் இருந்தது குறித்தும்,குறிப்பாக அந்த நிலப்பத்திரங்களின் விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவை இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் இருந்தது குறித்தும் சசிகலாவிடம் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும்,பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.