#IPL2022: டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது!
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத நிலையில், இன்று அவர் அணிக்கு கேப்டனாக மீண்டும் திரும்பியுள்ளார்.
விளையாடும் வீரர்கள்:
பஞ்சாப் கிங்ஸ்:
மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ககிசோ ரபாடா, நாதன் எலிஸ், ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.
டெல்லி கேபிட்டல்ஸ்:
பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், சர்பராஸ் கான், ஷர்துல் தாக்கூர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.