இந்த பதவி தேர்வுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Default Image

குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள்.

ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. விருப்ப பாடங்களின் வினாத்தாள் தமிழ், ஆங்கிலத்தில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி, சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி மற்றும் குற்றவியல் படத்திற்கு தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் அமைக்கப்படும் என கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் TNPSC ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வினாத்தாள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்