கேஜிஎப் நல்ல படம் தான், ஆனால் …, இதெற்கெல்லாம் நிகரானது இல்லை – தயாரிப்பாளர் சி.வி.குமார்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் மிக நன்றாக உள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சி வி குமார் அவர்கள், ஒரு முள்ளும் மலரும், கல்யாணப்பரிசு, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி, சதுரங்க வேட்டை, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, மெட்ராஸ், க க போ, விக்ரம் வேதா, தீரன்அதிகாரம்ஒன்று, இறுதிசுற்று, ராட்சசன், பரியேறும் பெருமாள், கைதி, ஜெய்பீம், டாணாக்காரன் ஆகிய படங்களை எல்லாம் விட இந்த மாஸ் கோலார் தங்கவயல் தான் பெஸ்ட் ஆஃப் பெஸ்ட்னா, தமிழ் சினிமாவே நல்லா இருக்குப்பா, தயவுசெய்து விட்டுருங்க எனப் கூறியுள்ளார்.
மேலும் கேஜிஎப் திரைப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் தான். ஆனால் தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் இயக்கியுள்ள படங்களுக்கு இது நிகரானது அல்ல என்பது தான் எனது கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரம்பரை , ஜெய்பீம் , டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா ????????????????
Note : it’s a gud entertainer but not at par to the level of our master crafters is my feel ????(2/2)
— C V Kumar (@icvkumar) April 19, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025