#GoodNews:மே 1 முதல் கட்டட அனுமதிக்கு நேரில் வர தேவையில்லை – தமிழக அரசு!

தமிழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதற்கு பொதுமக்கள் வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் நேரில் வர தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,இதற்காக தானியங்கி ஒற்றைச் சாளர கட்டட அனுமதி முறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி,கட்டட அனுமதி பெற விரும்புவோர் உரிய ஆவணங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டால் போதும் என்றும்,அதன்படி உரிய ஆவணங்களை பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலேயே அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கால தாமதம் மற்றும் அலைச்சலின்றி பொதுமக்கள் கட்டடங்களுக்கு அனுமதி பெரும் வகையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ஒற்றைச் சாளர கட்டட அனுமதி முறையை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025