#Breaking:மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்? – அரசு இன்று முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்றே குறைத்துக் கொண்டு வருகிறது. இதனால்,கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.எனினும்,மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில்,கொரோனாவின் தொற்று குறைந்து வருவதையொட்டி மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில்,மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில்,டெல்லி,கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,மிசோரம் உள்ளிட்ட மானிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.இதனால்,இந்த ஐந்து மாநிலங்களுக்கு,கொரோனா தொற்று பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும்,கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,டெல்லியில் 1.42 விழுக்காடாக இருந்த கொரோனா பரவல் தற்போது 3.49 விழுக்காடாக அதிகரித்துள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு டெல்லி துணை ஆளுநர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசனை இன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில்,டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025