#Transfered:புதுச்சேரி தலைமைச் செயலாளர் டெல்லிக்கு மாற்றம்!

புதுச்சேரியின் தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் ஐஏஎஸ் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் வர்மா ஐஏஎஸ் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வரும் நிலையில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.
அதைப்போல,டெல்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவர் தர்மேந்திரா ஐஏஎஸ் அருணாச்சல பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதைப்போல,அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் ஐஏஎஸ் டெல்லியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (திருத்தம்) மசோதா 2022க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிட் ஒப்புதல் அளித்த சில மணிநேரங்களில் இந்த உத்தரவு வந்துள்ளது.
Naresh Kumar appointed as Chief Secretary of Delhi with effect from April 21 or with effect from the date of joining; Dharmendra, who is currently the chairman of NDMC has now been appointed as Chief Secretary of Arunachal Pradesh pic.twitter.com/ff3NouIKMk
— ANI (@ANI) April 19, 2022
இதனிடையே,டெல்லியின் தற்போதைய தலைமைச் செயலாளர் விஜய் தேவ் இன்று (ஏப்ரல் 20-ம் தேதி) தானாக முன்வந்து ஓய்வு பெறுகிறார்.1987-பேட்ச் AGMUT (அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம், யூனியன் பிரதேசங்கள்) கேடர் ஐஏஎஸ் அதிகாரியான விஜய் தேவ்,நவம்பர் 2018 இல் டெல்லியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.அவர் மார்ச் 2023 இல் ஓய்வு பெறவிருந்தார்.எனினும்,முன்கூட்டியே அவர் சேவையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து,விஜய் தேவ் டெல்லி மற்றும் சண்டிகர் மாநில தேர்தல் ஆணையராக ஏப்ரல் 21ஆம் தேதி பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.