#IPL2022: 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய சாஹல்.. 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி!

Default Image

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியின் அதிரடி பந்துவீச்சாளர் சாஹல், 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியதால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 30-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரன் பின்ச் – சுனில் நரேன் களமிறங்கினார்கள். முதல் பந்திலே ஆரன் பின்ச் செய்த தவறால் சுனில் நரேன் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், ஆரன் பின்சுடன் இணைந்தார். இருவரும் கூட்டணி போட்டு அதிரடியாக அடிவர, ஆரன் பின்ச் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரைசதம் விலாச, 58 ரன்கள் அடித்து ஷ்ரேயாஸ் ஐயர் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, அதிரடியாக ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயர் 85 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அனைவரும் சாஹலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டை இழக்க, அவரும் ஹட்-ட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி, ஒரே ஓவரில் 4 விக்கெட்களை எடுத்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய உமேஷ் யாதவ் அதிரடியாக ஆடி, அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்.

கொல்கத்தா அணி வெற்றி பெரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 பந்துகளில் 21 ரன்கள் அடித்து உமேஷ் யாதவ் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக 19.4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன்கள் எடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக பந்துவீசிய சாஹல், 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்