இவரது மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – பிரதமர் மோடி ட்வீட்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஸ்வா தீனதயாளன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட்.
மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஸ்வா தீனதயாளன் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.’ என பதிவிட்டுள்ளார்.
டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.
— Narendra Modi (@narendramodi) April 18, 2022