என்றும் நட்பு.! வைகைபுயலுடன் நடன புயல்.! மீண்டும் ட்ரெண்ட் ஆகும் அந்த பாடல் வீடியோ..,
கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான திரைப்படம் மனதை திருடிவிட்டாய். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு ரசிக்கும் படியாக அமைந்தது.
குறிப்பாக இந்த படத்தில் வடிவேலு ‘சிங் இன் தி ரெய்ன்” பாடலை அவருடை பாணியில் பாடியிருப்பார். அவர் பாடிய அந்த காமெடி காட்சி அப்போதிலிருந்து இப்போது வரை அனைவரையும் கவர்ந்து. இந்த நிலையில், சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்த வடிவேலு 21-ஆண்டுகளுக்கு பிறகு “சிங் இன் தி ரெய்ன்” பாடலை பாடியுள்ளார்.
அவர் பாடிய இந்த வீடியோவை பிரபு தேவா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு ” நட்பு” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபு தேவா தற்போது பொன் மாணிக்கவேல், பஹீரா, பொய்காள் குதிரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Natpu ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/BCVJRixz9S
— Prabhudheva (@PDdancing) April 17, 2022
வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.