மண்பானை நிறைய தண்ணீர் இருந்தால் இத்தனை பலன்களா?
வீட்டில் மண்பானை நிறைய தண்ணீர் இருந்தால் பல்வேறு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும்.
இந்த காலத்தில் அதிகப்படியான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரும், ஆர்.ஓ தண்ணீரும் தான் உள்ளது. ஆனால், முந்தைய காலத்தில் அனைத்து வீடுகளிலும் மண்பானைகளில் தண்ணீர் வைத்து இருந்தனர். மண்பானை இல்லையென்றாலும் குடத்தில் தண்ணீர் வைத்திருப்பர். இது போன்று வீடுகளில் மண்பானை அல்லது குடத்தில் நிரம்ப நிரம்ப தண்ணீர் இருந்தால் அது பல்வேறு நற்பலன்களை தரும்.
முதலில் வீட்டில் குடம் அல்லது மண்பானையை வடக்கு திசையில் வைப்பது சிறப்பு. ஏனென்றால் இந்த திசை நீர் கடவுளுக்கு உரிய திசை. இந்த திசையில் மண்பானை அல்லது குடத்தில் நீர் நிறைய எப்போதும் வைத்திருக்க வேண்டும். இந்த மண்பானை முன்பு தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வந்தீர்கள் என்றால் உங்கள் வீட்டு பணக்கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் தீரும்.