#MIvLSG: ராகுலின் அதிரடியான சதம்.. மும்பை அணிக்கு அணி 200 ரன்கள் இலக்கு!

Default Image

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 199 ரன்கள் குவிப்பு.

ஐபிஎல் தொடரின் இன்றை 26-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தி பிற்பகல் தொடங்கிய இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், டி காக் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இவரைத்தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே சற்று நிதானமாக விளையாடி 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே, சென்ற போட்டியில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸஸும் சொற்ப ரன்களில் வெளியேற சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 56 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து தனது சத்தத்தை அதிரடியாக பூர்த்தி செய்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்துள்ளது.

அதிகபட்சமாக ராகுல் 60 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். அதுமட்டுமில்லாமல் மும்பை அணிக்கு எதிராக 2வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கொள்கிறார் கேஎல் ராகுல் மும்பை அணி பந்துவீச்சை பொறுத்தளவில் ஜெய்தேவ் உனத்கட் 2, முருகன் அஸ்வின், ஃபேபியன் ஆலன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த நிலையில், மும்பை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயம் செய்துள்ளது. எனவே, தொடர் தோல்வியில் இருந்து மும்பை மீளுமா?, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin