இலங்கை அதிபருக்கெதிரான போராட்டத்தில் களமிறங்கிய இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா …!
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன், மின் தட்டுப்பாடும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இலங்கையில் உள்ள மக்கள் வீதிக்கு வந்து இலங்கை அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கண்டனம் தெரிவித்து வந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அவர்கள், தற்போது இலங்கை அதிபருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.