தமிழக நீதிமன்ற கட்டமைப்பு சிறப்பாக உள்ளது – உச்சநீதிமன்ற நீதிபதி
தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து.
தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. ஏழையும், கல்வியறிவு அற்றவரும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினால் நீதிமன்ற கட்டமைப்பில் தவறு உள்ளது என்பதே அர்த்தம்.
பெண்ணுக்கு பெண்தான் எதிரி,சமுதாய கட்டமைப்பு பற்றி தெரியாத நீதிபதி நல்ல நீதிபதியாக ஆக முடியாது. ஒரே சட்டத்தை பின்பற்றி சமுதாயத்தில் இருக்கிற பலருக்கும் நீதி அளிப்பது சரியாக இருக்காது போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது.