அனுமன் ஜெயந்தி – காரணம் மற்றும் சிறப்புகள் அறியலாம் வாருங்கள்…!
அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தி என்பது வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி அனுமனை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில்தான் ஹனுமான் பிறந்தார். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த அனுமன் ஜெயந்தி தினம் வருடந்தோறும் சைத்ரா மாதம் மற்றும் பௌர்ணமி நாளில் தான் வருகிறது.
ராமபிரானின் முதன்மை பக்தனாக விளங்கும் அனுமன், தற்பொழுது மக்களால் வழிபடக்கூடிய கடவுளாக உருவெடுத்துள்ளார். அனுமன் சிவபெருமானின் அவதாரம் என்றும் அதனால்தான் அவர் ருத்ராவ்தர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் நம்பப்படுகிறது. சனிபகவான் மகர ராசியில் அமர்வதால் இந்த அனுமன் ஜெயந்தி 31 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவது சிறப்பு வாய்ந்தவை.
இந்துக்கள் மத்தியில் அனுமன் ஜெயந்திக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அனுமனை ஏராளமானோர் பின்பற்றி பக்தியுடன் வழிபடுகிறார்கள். ஹனுமன் ஜெயந்தியை மக்கள் முழு உற்சாகத்துடனும் கொண்டாடுகிறார்கள், ஏனெனில் அவர் பூமியில் வாழும் கடவுள் என்று நம்பப்படுகிறது.
பூஜைகள்
அனுமன் ஜெயந்தி அன்று ஆங்காங்கு உள்ள அனுமன் ஆலயங்களில் எல்லாம் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த வருடம் பூர்ணிமா தேதி ஏப்ரல் 16 அன்று அதிகாலை 02.25 தொடக்கி ஏப்ரல் 17 நள்ளிரவு 12.24- க்கு முடிவடைகிறது. அனுமன் ஜெயந்தி தினத்தில் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.
மேலும், அன்றைய தினம் சாப்பிடாமல் விரதம் இருந்து, அனுமன் ஆலயத்தில் 108 முறை ராம நாமம் சொல்லி அனுமனை வணங்குவார்கள். அவ்வாறு செய்வதால் தீயசக்திகள் தங்களை தாக்காது என்பது ஐதீகம்.
சிறப்புகள்
அனுமனை பிரியப்படுத்துவதற்காக மக்கள் பொரி, அவல், பழங்கள் , லட்டு ஆகியவற்றை அனுமனுக்கு படைப்பதும் வழக்கம். மேலும், சிலர் அன்றைய தினம் இல்லாதவர்களுக்கு உணவளிப்பது போன்ற தான தர்மங்களையும் செய்வதும் வழக்கம்.