#Breaking:காங்.மூத்த தலைவர்கள்,PK உடன் சோனியா காந்தி முக்கிய ஆலோசனை!
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக,காங்கிரஸ் தலைவர்கள் அம்பிகா சோனி,திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மக்கன் ஆகியோர் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மேலும்,அவரது இல்லத்தில் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உள்ளனர்.
குறிப்பாக,சோனியா காந்தியின் இல்லத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.2024 பொதுத் தேர்தல் உட்பட,பிற தேர்தல்களுக்கு முன்னதாக காங்கிரஸை மீண்டும் உயிர்ப்பிப்பதன் முயற்சியின் முக்கிய பங்கிற்கான சந்திப்பாக இவை பார்க்கப்படுகிறது.
மேலும்,விரைவில் குஜராத் மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
#UPDATE | Delhi: Poll strategist Prashant Kishor is also present at the residence of Congress chief Sonia Gandhi where leaders of the party, including Rahul Gandhi, are present.
— ANI (@ANI) April 16, 2022