கணவருடன் சண்டையிட்டு ஆத்திரத்தில் 3 மாத மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்…!
டெல்லியிலுள்ள ஹைதர்பூர் எனும் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு வீட்டுப் பிரச்சினை காரணமாக சண்டை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் அந்த பெண் தனது மூன்று மாத மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இருவரும் சண்டையிட்டு பின்பு கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். அதன் பின் அந்த பெண் தனது குழந்தையின் கழுத்தில் இருந்த நூலை வைத்து இறுக்கி குழந்தையை கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.