2 ஆண்டுகளுக்கு பிறகு…வெகு சிறப்பாக தொடங்கிய மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்!
மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மதுரை மல்லி மற்றும் மீனாட்சி அம்மன் கோவில்தான்.அந்த வகையில்,ஆண்டு தோறும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை நிகழ்வையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலத்தில் காணப்படும்.
இந்நிலையில்,சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்வை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேரோட்டம் வெகு சிறப்பாக சற்று முன்னர் தொடங்கியுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தேர் திருவிழாவானது பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,இத்தேர் பவனியைக் காண மதுரை மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம் குவிந்துள்ளது.இதனிடையே,கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனும் எழுந்தருளினர். அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
Tamil Nadu | The annual chariot festival to begin with glory as a huge crowd gathers outside Meenakshi Amman Temple in Madurai
Visuals from Masi Street pic.twitter.com/hRCwTOLa5D
— ANI (@ANI) April 15, 2022