வெயிலில் அலைவதால் முதுகு, கழுத்து பகுதியில் பரு, அரிப்பு, அலர்ஜி ஏற்படுகிறதா?இத செய்யுங்க..!

Default Image

கோடை கால வெயிலில் அலைவதால் முதுகு, கழுத்து பகுதியில் பரு, அரிப்பு, அலர்ஜி ஏற்படுகிறதா? இந்த டிப்ஸ பயன்படுத்துங்கள்.

கோடைக்காலம் வந்தாலே வெளியே செல்வதற்கு பலரும் பயப்படுகின்றனர். அந்த அளவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெயிலில் அலைவதால் அதிகமாக வியர்வை சுரக்கும். இது உடலுக்கு நன்மையும் கூட, ஆனால், அதேசமயம் நாம் உடலை ஆரோக்கியமாகவும் அடிக்கடி தண்ணீர் குடித்து உடலை பார்த்து கொள்வதும் அவசியம். அந்த வகையில் இந்த வியர்வை காரணமாக உடலில் அரிப்பு, அலர்ஜி, பரு போன்றவை ஏற்படும். குறிப்பாக முதுகுப்பகுதி, கழுத்து இதுபோன்ற இடங்களில் அரிப்பு இருக்கும். இந்த அலர்ஜிக்கு நீங்கள் வீட்டிலேயே எளிமையாக என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய்:

கோடைக்காலம் என்றாலே எல்லார் வீட்டிலும் வெள்ளரிக்காய் இருக்கும். இது தண்ணீர் காய் என்பதால் உடலுக்கு மிகவும் நன்மை தரும். இந்த கதையை சிறிய துண்டுகளாக வெட்டி அதனை குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். பின்னர் அந்த வெள்ளரிக்காய் துண்டை எடுத்து அலர்ஜி அல்லது சூட்டினால் பரு முட்கள் போல் இருக்கும் இடத்தில் தேய்க்கவும். இது போன்று ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்யலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

முல்தானி மெட்டி:

வீட்டில் பெண்கள் அழகு பராமரிப்பிற்கு முல்தானி மெட்டி பயன்படுத்துவதை பார்த்திருப்போம். இது அழகு பராமரிப்பிற்கு மட்டுமில்லாமல், உடலின் சூட்டையும் தணிக்கும். உங்கள் உடலில் சூட்டினால் ஏற்பட்டிருக்க கூடிய சிறு கட்டிகள் அல்லது பரு போன்று இருந்தால் அந்த இடத்தில் முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீருடன் கலந்து தடவ வேண்டும். இது காய்ந்த பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்:

வெயில் காலம் வந்தாலே தினமும் கற்றாழை ஜெல் பயன்படுத்த துவங்குவது நல்லது. அதில் நிறைய நன்மை கிடைக்கும். இது குளிர்ச்சி என்பதால் உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த கற்றாழை ஜெல்லை அரிப்பு அல்லது பரு உள்ள இடங்களில் தடவவும். இது சிறந்த நிவாரணம் அளிக்கும். மேலும், இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது ஆறிய பின்னர் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்:

எளிமையான ஒரு தீர்வு என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். அனைத்து வீடுகளிலும் தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் நிறைந்து இருக்கும் என்பதால் இது சூடு சார்ந்த பாதிப்புகளுக்கு நல்ல விளைவை தரும். இரவில் தூங்கும் பொழுது எந்த இடம் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு தூங்குங்கள். சிறந்த மாற்றத்தை அளிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்