தேநீர் செலவு மிச்சம் – ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை..!

Default Image

தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் தேனீர் செலவு மிச்சமாகும் என அண்ணாமலை பேட்டி. 

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்துள்ளது.  நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் தாமதம் செய்வதை கண்டித்து இந்த தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் ஆகியோரும், பாஜக சார்பில் அண்ணாமலை,  வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோரும், பாமக சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  தேநீர் விருந்து புறகணிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் தேனீர் செலவு மிச்சமாகும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்