திருப்பூரில் 2 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களை இடிக்க தடை – உயர்நீதிமன்றம்

Default Image

திருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களையும் இடிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை. 

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, இரண்டு கோயில்களையும் இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையத்தை சேர்ந்த கோபிநாதன் என்பவரும், வடுக பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நூற்றாண்டு பழமையான கோயில்கள் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த கோவில்களை இடிக்க கூடாது என வாதிட்டனர்.

மனுதாரரின் கருத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் நூற்றாண்டு பழமையான 2 கோவில்களையும் இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்